search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெகன்மோகன் ரெட்டி
    X
    ஜெகன்மோகன் ரெட்டி

    வெங்கையா நாயுடு, சந்திரபாபு நாயுடுவுக்கு ஜெகன்மோகன் ரெட்டி கண்டனம்

    ஆங்கில வழி கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்த வெங்கையா நாயுடு, சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    விஜயவாடா:

    ஆந்திராவில் தெலுங்கு மற்றும் உருது மொழி வழிக்கல்வி கற்பிக்கும் அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த அரசு பள்ளிகள் ஆங்கில வழி பள்ளிகளாக மாற்றப்படும் என்றும் ஆங்கில வழி கல்வி முறை 2020-21-ம் கல்வியாண்டில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையும். 2021-22-ம் கல்வியாண்டில் 9 முதல் 10-ம் வகுப்புகளுக்கு நடை முறைப்படுத்தப்படும் என்றும் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

    இந்த அறிவிப்புக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு, ஜனசேனா தலைவர் நடிகர் பவன் கல்யாண் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    அவர்களுக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

     

    வெங்கையா நாயுடு

    ஆங்கில வழி கல்வியை எதிர்ப்பவர்களின் குழந்தைகள் அனைவரும் எந்த பள்ளியில் படிக்கிறார்கள்? சந்திரபாபு நாயுடுவின் மகன் எந்த பள்ளியில் படித்தார்? அவரது பேரக் குழந்தைகள் எந்த பள்ளியில் படித்து கொண்டிருக்கிறார்கள்?

    இன்றைய உலகம் போட்டிகள் நிறைந்தது. எனவே ஆங்கிலம் இல்லாமல் ஒருவர் உலகத்துடன் போட்டி போட முடியாது. ஆகவேதான் நமது குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கொடுக்க வேண்டும்.

    அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி கற்பிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறேன்.

    இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஏழைகளுக்கு ஏன் ஆங்கில வழிக்கல்வி, அவர்களுக்கு தெலுங்கு வழிக்கல்வி போதாதா? என்று கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் குழந்தைகள் மட்டும் ஆங்கில பள்ளியில் படிக்கலாமா? ஏழை குழந்தைகள் படிக்க கூடாதா?

    இந்த அறிவிப்பை எதிர்க்கும் வெங்கையா நாயுடு, சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோர் அவர்களது வீட்டு குழந்தைகள் எந்த பள்ளியில் படிக்கிறார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×