search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்களை கட்டுப்படுத்தும் போலீசார்
    X
    ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்களை கட்டுப்படுத்தும் போலீசார்

    சத்தீஸ்கரில் போலீஸ் கேம்ப் அமைத்ததை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

    சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் போலீஸ் கேம்ப் அமைத்ததைக் கண்டித்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தினால் பரபரப்பு ஏற்பட்டது.
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளை ஒழித்துக் கட்ட ராணுவம் தொடர்ந்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மற்றும் மாவோயிஸ்டகளால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆங்காங்கே முகாம்கள் அமைத்து ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

    இந்நிலையில், தண்டேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள போடாலி கிராமத்தில், ஆயுதப்படையினரின் கண்காணிப்பு பணிகளுக்காக புதிதாக ஒரு முகாம் அமைக்கப்பட்டது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஏராளமான ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டனர்.


    நேற்று கிராம மக்கள் ஒன்றுதிரண்டு போலீஸ் முகாம் அமைத்ததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமானோர் கூடியதால் பதற்றம் ஏற்பட்டது. போலீசாருக்கும் பொதுமக்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் கடுமையாக போராடி பொதுமக்களை கட்டுப்படுத்தினர். மாவோயிஸ்டுகளின் அழுத்தம் காரணமாக பொதுமக்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டதாக மாவட்ட எஸ்பி கூறினார்.

    Next Story
    ×