search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காணிக்கை உண்டியலில் கிடந்த துப்பாக்கி தோட்டா.
    X
    காணிக்கை உண்டியலில் கிடந்த துப்பாக்கி தோட்டா.

    குருவாயூர் கோவில் உண்டியலில் கிடந்த துப்பாக்கி தோட்டா - போலீசார் விசாரணை

    குருவாயூர் கோவில் காணிக்கை உண்டியலில் துப்பாக்கி தோட்டாவை போட்டது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள குருவாயூரில் பிரசித்திபெற்ற ஸ்ரீகிருஷ்ண சுவாமி கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் எடைக்கு எடை பழம், சர்க்கரை போன்ற பொருட்களை துலாபாரமாக வழங்கி வழிபாடு செய்வார்கள். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வருகை தருகிறார்கள்.

    குருவாயூர் கோவில்

    இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் எஸ்-6 மற்றும் எஸ்-7 ஆகிய 2 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.

    அப்போது ஒரு உண்டியலில் துப்பாக்கி தோட்டா ஒன்று கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அந்த தோட்டாவையும் அவர்கள் கைப்பற்றினார்கள்.

    அப்போது அந்த தோட்டா 9 எம்.எம். ரக கைத்துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் தோட்டா என்பது தெரிய வந்தது. அந்த துப்பாக்கி தோட்டாவை கோவில் காணிக்கை உண்டியலில் போட்டது யார்? என்பதை கண்டறிய தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் இதுபற்றிய தகவல் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



    Next Story
    ×