search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பந்திபோராவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவம் (கோப்பு படம்)
    X
    பந்திபோராவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவம் (கோப்பு படம்)

    ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, அசம்பாவித சம்பங்களை தவிர்ப்பதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பல்வேறு கட்டுப்படுகள் விதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க ராணுவம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

    இந்நிலையில் பந்திபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தககவல் கிடைத்ததையடுத்து, இன்று பாதுகாப்பு படையினர் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

    அப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையே கடும் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது.  

    இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவர்கள் யார், எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. 
    Next Story
    ×