search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜகவின் சின்னத்துடன் கூடிய கொடி
    X
    பாஜகவின் சின்னத்துடன் கூடிய கொடி

    ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்: 52 பெயர்கள் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது

    ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 52 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. முதல் மந்திரி ரகுபர் தாஸ் கிழக்கு ஜாம்ஷெட்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
    ராஞ்சி:

    81 இடங்களை கொண்ட ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கு நவம்பர் 30 முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    முதல்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 30-ம் தேதியும் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 7-ம் தேதியும், மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 12-ம் தேதியும் நான்காம்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 16-ம் தேதியும் நடைபெறும். டிசம்பர் 20-ம் தேதி ஐந்தாவது இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

    ஐந்து கட்டங்களிலும் பதிவான வாக்குகள் டிசம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலைக்குள் முடிவுகள் வெளியாகிவிடும்.

    ரகுபர் தாஸ்

    வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு நவம்பர் 13-ம் தேதி கடைசி நாள் என்னும் நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடவுள்ள 52 நபர்களின் பெயர்களை கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை டெல்லியில் உள்ள பாஜக தலைமை இன்று மாலை வெளியிட்டது.

    இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள அம்மாநில முதல் மந்திரி ரகுபர் தாஸ் கிழக்கு ஜாம்ஷெட்பூர் தொகுதியிலும் ஜார்கண்ட் மாநில பாஜக தலைவர் லக்‌ஷ்மன் கிலுவா சக்ரதார்பூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

    இதேபோல், 5 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சியும் இன்று மாலை வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் ஜார்கண்ட் மாநில தலைவர் ரமேஷ்வர் ஓரவுன் லோஹர்தாகா
    தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

    Next Story
    ×