search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆலோசனை கூட்டத்தில் அஜித் தோவால்
    X
    ஆலோசனை கூட்டத்தில் அஜித் தோவால்

    அயோத்தி தீர்ப்பு: மதத் தலைவர்களுடன் மத்திய உள்துறை செயலாளர் இரண்டாம் நாளாக ஆலோசனை

    அயோத்தி நிலம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது பற்றி மதத் தலைவர்களுடன் மத்திய உள்துறை செயலாளர் இரண்டாம் நாளாக இன்றும் ஆலோசனை நடத்தினார்.
    புதுடெல்லி:

    அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக இருந்த 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது. கோவில் கட்டுவதற்காக 3 மாதத்திற்குள் அறக்கட்டளை ஒன்றை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.

    மசூதி கட்டுவதற்காக அயோத்தியின் முக்கியமான பகுதியில் 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியத்துக்கு ஒதுக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்திருந்தது.

    சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின் மூலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது உறுதியாகி உள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஏப்ரல் மாதம் அடிக்கல் நாட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், விசுவ இந்து பரி‌ஷத்தும் தீவிரம் காட்டியுள்ளன.

    ஆலோசச்னையில் பங்கேற்றவர்கள்

    ராம நவமி தினம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொண்டாடப்படுகிறது. அப்போது ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்ட இந்த இரு அமைப்புகளும் திட்டமிட்டுள்ளன.

    இதற்கிடையில், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது பற்றி மதத் தலைவர்களுடன் மத்திய உள்துறை செயலாளர் அஜித் தோவால் இரண்டாம் நாளாக இன்றும் ஆலோசனை நடத்தினார்.

    இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பாபா ராம்தேவ், சுவாமி பரமாத்மானந்த், ஷியா பிரிவு முஸ்லிம்களின் தலைவர் மவுலானா கல்பே ஜாவத் உள்ளிட்டோர் பங்கேற்று தங்களது கருத்துகளை  உள்துறை செயலாளர் அஜித் தோவாலிடம் தெரிவித்தனர்.

    Next Story
    ×