search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புயலால் சேதமான விடு
    X
    புயலால் சேதமான விடு

    புல்புல் புயல் பாதிப்புகள் குறித்து மம்தா பானர்ஜியிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி

    புல்புல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியிடம், பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
    புதுடெல்லி:

    வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புதிய புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘புல்புல்’ என பெயரிடப்பட்டது.

    இதற்கிடையே, இன்று அதிகாலை 2.30 மணியளவில், புல்புல் புயல் கடலோர மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேச நாட்டை ஒட்டிய பகுதியில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வரை காற்று வேகமுடன் வீசியது.

    வங்காள தேசத்தின் தலைநகர் டாக்கா உள்பட பல்வேறு பகுதிகளிலும் நேற்று முழுவதும் மழை பெய்தது. வங்காள விரிகுடாவில் இருந்து சுந்தரவன கடலோர பகுதியை நோக்கி புல்புல் புயல் நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது என வங்காளதேச வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், புல்புல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியிடம், பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், புல்புல் புயல் மற்றும் கனமழையால் கிழக்கு இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலைமையை ஆய்வு செய்துள்ளேன். புயலால் ஏற்பட்டுள்ள சூழல் பற்றி மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியிடம் பேசியுள்ளேன். தேவைப்படும் அனைத்து உதவிகளும் மத்திய அரசால் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×