search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரவிந்த் கெஜ்ரிவால்
    X
    அரவிந்த் கெஜ்ரிவால்

    சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு கெஜ்ரிவால் வரவேற்பு

    அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோட்டின் தீர்ப்பை ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்- மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்றுள்ளார்.
    புதுடெல்லி:

    அயோத்தி வழக்கில் சர்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    சுப்ரீம் கோட்டின் இந்த தீர்ப்பை ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்- மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அயோத்தி வழக்கில் தீர்ப்பை வழங்கி உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்.

    மிகவும் பழமைவாய்ந்த பல ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வழங்கி உள்ளது. இதன் மூலம் பல ஆண்டு பிரச்சனை இன்று முடிவுக்கு வந்துள்ளது. சமூக நல்லிணக்கம் காக்க அனைத்து மக்களும் அமைதி காக்க வேண்டும்.

    இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
    Next Story
    ×