search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை விபத்து
    X
    சாலை விபத்து

    ஆந்திராவில் சோகம் - லாரி மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 11 பேர் பலி

    ஆந்திராவில் கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதிய விபத்தில் வேனில் பயணித்த பெண்கள் உள்பட 11 பேர் பரிதாபமாக பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே இன்று சித்தூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

    அப்போது சாலை தடுப்பில் மோதி எதிரே வந்த வேனுடன் மோதியது. அதைத்தொடர்ந்து வந்த பைக்கும் மோதியது.

    இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த பெண்கள் உள்பட 11 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×