என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அத்வானி பிறந்தநாள்- துணை ஜனாதிபதி, பிரதமர் நேரில் சென்று வாழ்த்தினர்
Byமாலை மலர்8 Nov 2019 5:39 AM GMT (Updated: 8 Nov 2019 11:39 AM GMT)
பாஜக மூத்த தலைவர் அத்வானியின் பிறந்தநாளையொட்டி அவரது வீட்டிற்கு துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
புதுடெல்லி:
பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று தனது 92-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் உள்ள அத்வானியின் வீட்டுக்கு சென்றார். அவரை அத்வானி வாசலுக்கு வந்து வரவேற்று அழைத்துச் சென்றார். அப்போது, அத்வானிக்கு பிரதமர் மோடி மலர்க்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
#WATCH: PM Narendra Modi meets senior BJP leader LK Advani at the latter's residence on his 92nd birthday. Vice President Venkaiah Naidu, BJP President Amit Shah and BJP working President JP Nadda also present. #Delhipic.twitter.com/zUvVVQJMvg
— ANI (@ANI) November 8, 2019
பின்னர் வீட்டுக்குள் சென்றதும் இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, செயல் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரும் உடனிருந்தனர். அவர்களும் அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
சிறிது நேரத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் அங்கு வந்து, அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
Next Story
×