search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஜம்மு காஷ்மீரில் இனி கண்காணிப்பு பணிகளை சுலபமாக மேற்கொள்ளலாம் - ராணுவ தளபதி

    ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளதால் இனி கண்காணிப்பு பணிகளை சுலபமாக மேற்கொள்ள முடியும் என இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இரண்டு யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

    இந்நிலையில், காஷ்மீரில் உள்ள ரஜோரி மற்றும் ரேசி ஆகிய பகுதிகளை சேர்ந்த பல்வேறு மதத்தினர் தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் விதமாக மேற்கொண்டுள்ள சுற்றுலா பயணத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவ தளபதி பிபின் ராவத் பங்கேற்றார். 

    நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ தளபதி பிபின் ராவத் கூறுகையில்,

    'ரஜோரி பகுதியை சேர்ந்த பல்வேறு மதத்தினை சேர்ந்த தலைவர்களை நான் சந்தத்தது மிகவும் மகிழ்ச்சியான தருணம். 

    இவர்கள் அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்க மேற்கொண்டுள்ள பயணத்தின் ஒரு பகுதியாக இங்கு வந்துள்ளனர். இது தான் காஷ்மீரில் அனைத்து சமூகத்தினரும் வாழும் முறைக்கு சிறந்த உதாரணமாக உள்ளது. 

    காஷ்மீரை சேர்ந்த பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களை சந்தித்த ராணுவ தளபதி

    இது அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்துடன் வாழவேண்டும் என்ற செய்தியை காஷ்மீர் மக்களுக்கு கொண்டு சேர்த்திருக்கும். அனைத்து மதங்களும் அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தையே எடுத்துரைக்கிறது.

    அனைத்து மத போதகர்களும் தங்கள் மத புத்தகங்களில் என்ன எழுதி இருக்கிறதோ அதன் உண்மையான அர்த்தத்தை எடுத்துரைத்தால் அமைதி மற்றும் நல்லிணக்கம் நிலவும்.  

    இதன் மூலம் தவறான பாதைகளை தேர்ந்தெடுக்க நினைப்பவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள்.  மேலும், இதனால் ஜம்மு காஷ்மீர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவே ஒன்றினைந்து வாழ வழிவகுக்கும்.

    ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதால் இனி கண்காணிப்பு பணிகளை இனி சுலபமாக மேற்கொள்ளலாம். மேலும், இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் காஷ்மீருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை’.

    என அவர் கூறினார்.
    Next Story
    ×