search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரவு வரை நீடித்த போராட்டம்
    X
    இரவு வரை நீடித்த போராட்டம்

    வக்கீல்கள் தாக்குதல்: டெல்லி போலீசாரின் 11 மணிநேர போராட்டம் வாபஸ்

    வழக்கறிஞர்களால் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து டெல்லி போலீசார் இன்று காலையில் இருந்து 11 மணி நேரமாக நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
    புதுடெல்லி:

    டெல்லியின் தெற்கு பகுதியில் டிஸ்ஹசாரி கோர்ட்டு உள்ளது. கடந்த 2-ந்தேதி இங்கு வாகனம் நிறுத்தம் தொடர்பாக போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இந்த மோதல் கலவரமானது. இதன் தொடர்ச்சியாக டெல்லியில் உள்ள சகேட் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியில் பணியில் இருந்த ஒரு போலீஸ் மீது சில வக்கீல்கள் நேற்று தாக்குதல் நடத்தினர்.

    இதுவரை நடந்த மோதல்களில் 20 போலீசாரும், 8 வக்கீல்களும் காயம் அடைந்தனர். மோட்டார் சைக்கிள்கள், போலீசாரின் கார் உள்பட 20 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

    இதையடுத்து, வக்கீல்கள் தாக்கியதை கண்டித்து டெல்லியில் இன்று போலீசார் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி போலீஸ் தலைமை அலுவலகம் முன்பு நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் பங்கேற்ற போலீசாரின் குடும்பத்தினர்

    தமிழ்நாடு ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் மற்றும் சில மாநிலங்களை சேர்ந்த போலீஸ் சங்கங்கள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கவே டெல்லி போலீசாரின் போராட்டம் விஸ்வரூபம் எடுக்கலாம் என்ற பீதி மக்களிடையே ஏற்பட்டது.

    போராட்டத்தில் ஈடுப்பட்ட போலீசாரை சமாதனப்படுத்திப் பேசிய டெல்லி போலீஸ் ஆணையர் அமுல்யா பட்நாயக், 'சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் நாம் நமக்கான கடமையை சரிவர செய்யவேண்டும். ஆகையால், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் போலீசார் அமைதியான முறையில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்’ என தெரிவித்தார்.

    இருப்பினும் போலீசார் பணிக்கு செல்லாமல் இன்று மாலைக்கு பின்னும் மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறு போராட்டத்தை தொடர்ந்தனர். போலீசாருக்கு ஆதரவாக அவர்களின் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதி அருகே மெழுகுவர்த்திகளை ஏற்றி ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தனர்.

    இதற்கிடையில், போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காயமடைந்தவர்களுக்கு உயர்தரமான சிகிச்சையுடன் நிவாரணத்தொகையும் அளிக்கப்படும் என டெல்லி துணைநிலை கவர்னர் அனில் பைஜால் இன்றிரவு தெரிவித்தார்.

    தாக்குதல் நடத்திய வழக்கறிஞர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். டெல்லி ஐகோர்ட்டில் இதுதொடர்பாக வழக்கு தொடரப்படும். காயமடைந்த போலீசாருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை நிவாரணத்தொகையாக வழங்கப்படும் என டெல்லி போலீஸ் சிறப்பு கமிஷனர் ஆர்.எஸ்.கிருஷ்ணியா போராட்டத்தில் ஈடுபட்ட போலீசாரிடம் வாக்குறுதி அளித்தார்.

    இதைதொடர்ந்து, இன்று காலையில் இருந்து சுமார் 11 மணி நேரமாக நடத்திய போராட்டத்தை டெல்லி போலீசார் வாபஸ் பெற்றனர்.

    Next Story
    ×