search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிராக் பாஸ்வான்
    X
    சிராக் பாஸ்வான்

    லோக் ஜன்சக்தி கட்சி தலைவராக சிராக் பாஸ்வான் ஒருமனதாக தேர்வு

    மத்திய மந்திரி ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
    புதுடெல்லி:

    ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக அக்கட்சியில் இருந்து வெளியேறிய ராம்விலாஸ் பாஸ்வான் கடந்த 28-10-2000 அன்று லோக் ஜன்சக்தி கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

    பீகார் மாநிலத்தை சேர்ந்த ராம்விலாஸ் பாஸ்வான் பாராளுமன்ற தேர்தலில் 8 முறை வெற்றிபெற்று எம்.பி.யாக பதவி வகித்துள்ளார். மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள லோக் ஜன்சக்தி கட்சிக்கு பாராளுமன்றத்தில் 6 உறுப்பினர்களும் பீகார் சட்டசபையில் 2 உறுப்பினர்களும் உள்ளனர்.

    தற்போது மத்திய உணவுத்துறை, பொது வினியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மந்திரியாக பதவி வகிக்கும் ராம்விலாஸ் பாஸ்வான் சுமார் 20 ஆண்டுகளாக லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவராக இருந்து வந்துள்ளார். இந்த கட்சிக்கு பீகாரில் மட்டுமின்றி அருகாமையில் இருக்கும் வேறுசில மாநிலங்களிலும் செல்வாக்கு உள்ளது.

    தனது மகன் சிராக் பாஸ்வானுக்கு மாலை அனுவிக்கும் ராம் விலாஸ் பாஸ்வான்

    பீகார் மாநிலத்தில் உள்ள ஜாமுய் (ரிசர்வ்) பாராளுமன்ற தொகுதியில் 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    நீதித்துறை, சட்டம், மக்கள் குறைகேட்பு ஆகியவற்றுக்கான பாராளுமன்ற நிலைக்குழு தலைவராகவும் இருக்கும் சிராக் பாஸ்வான்(37) லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அவரது தந்தை ராம்விலாஸ் பாஸ்வான்(73) இன்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×