search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நக்சலைட்டுகள் (கோப்பு படம்)
    X
    நக்சலைட்டுகள் (கோப்பு படம்)

    சத்தீஸ்கரில் சிறப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 2 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்

    சத்தீஸ்கர் மாநிலத்தில் சிறப்பு படையினரின் இன்று நடத்திய தேடுதல் வேட்டையில் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    ராய்பூர்:

    மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர். 

    பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, ஜார்கண்ட், மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்களை வேட்டையாட மாநில தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டிவாடா மாவட்டத்தில் உள்ள முங்கா கிராமத்தை சுற்றியுள்ள காடுகளில் அம்மாவட்ட சிறப்பு படையினர் இன்று 11.30 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகள் சிறப்பு படையினர் மீது திடீர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். 

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிறப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    மேலும், தாக்குதல் நடத்திய நக்சலைட்டுகளிடமிருந்து வெடிபொருட்கள் உள்பட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து அந்த காட்டுப்பகுதியை சுற்றிலும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×