search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிரண் பேடியின் புகைப்படத்தை ஏந்தி போராட்டம் நடத்தும் போலீசார்
    X
    கிரண் பேடியின் புகைப்படத்தை ஏந்தி போராட்டம் நடத்தும் போலீசார்

    கிரண் பேடி மீண்டும் இங்கு வர வேண்டும்- தாக்குதலை கண்டித்து டெல்லி போலீசார் ஆர்ப்பாட்டம்

    வக்கீல்கள் நடத்திய தாக்குதலை கண்டித்து டெல்லி போலீசார் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டத்தில் கிரண் பேடி மீண்டும் இங்கு வர வேண்டும் என்ற பதாகைகள், கோஷங்கள் எழுப்பப்பட்டது.
    புதுடெல்லி:

    டெல்லியின் தெற்கு பகுதியில் டிஸ்ஹசாரி கோர்ட்டு உள்ளது. கடந்த 2-ந்தேதி இங்கு வாகனம் நிறுத்தம் தொடர்பாக போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இந்த மோதல் கலவரமானது. இதன் தொடர்ச்சியாக டெல்லியில் உள்ள சகேட் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியில் பணியில் இருந்த ஒரு போலீஸ் மீது வக்கீல்கள் சிலர் தாக்குதல் நடத்தினர். 



    இதுவரை நடந்த மோதல்களில் 20 போலீசாரும், 8 வக்கீல்களும் காயம் அடைந்தனர். மோட்டார் சைக்கிள்கள், போலீசாரின் கார் உள்பட 20 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

    டெல்லி போலீஸ் ஆணையர் அமுல்யா பட்நாயக்

    இதையடுத்து, வக்கீல்கள் தாக்கியதை கண்டித்து டெல்லியில் இன்று போலீசார் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி போலீஸ் தலைமை அலுவலகம் முன்பு நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர். 

    இந்த போராட்டத்தின் போது, போலீசார் சிலர் டெல்லி முன்னாள் சிறப்பு போலீஸ் ஆணையர் கிரண் பேடியின் புகைப்படத்தை ஏந்தி நீங்கள் மீண்டும் இங்கு வர வேண்டும், நீங்கள் எங்களுக்கு தேவை போன்ற என்ற பதாகைகள் எந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.   

    இந்நிலையில், போராட்டத்தில் ஈடுப்பட்ட போலீசாரை சமாதனப்படுத்திப் பேசிய டெல்லி போலீஸ் ஆணையர் அமுல்யா பட்நாயக், 'சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் நாம் நமக்கான கடமையை சரிவர செய்யவேண்டும். ஆகையால், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் போலீசார் அமைதியான முறையில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்’ என தெரிவித்தார்.

    இதற்கிடையில், போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே கடந்த 2-ம் நடந்த மோதல் தொடர்பான தகவல்களை டெல்லி போலீசார் இன்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கையாக வழங்கியுள்ளனர்.
    Next Story
    ×