search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோபோட் வீடியோ ஸ்கிரீன்ஷாட்
    X
    ரோபோட் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

    மிலிட்டரி ரோபோட் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா?

    மிலிட்டரி ரோபோட் ஒன்று சோதனை செய்யப்படும் காட்சிகள் நிறைந்த வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.



    பாலைவன பகுதியில் ரோபோட் ஒன்று சோதனை செய்யப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. வீடியோவில் சுடும் வெயிலில் கார்டூன் பொம்மை போன்று காட்சியளிக்கும் ரோபோட் முதலில் தனக்கு கொடுக்கப்பட்ட கை துப்பாக்கி மூலம் இலக்குகளை மிகச்சரியாக சுடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    பின் ரோபோட் இடையூறுகளை கடந்து இலக்குகளை துல்லியமாக சுடும் காட்சிகளும் அடுத்தடுத்து வருகின்றன. செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ரோபோட் இலக்குகளை பதம் பார்ப்பதாக இணையவாசிகள் வீடியோவில் கமென்ட் செய்து வருகின்றனர். வீடியோவில் சிலர் ரோபோட்டை கடுமையாக தாக்கும் போதும், இலக்கினை ரோபோட் சாதூர்யமாக தகர்க்கும் காட்சிகள் இருக்கின்றன.

    ரோபோட் வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    உண்மையில் வீடியோவில் இருப்பது ராணுவ ரோபோட் தானா என தேடியதில், அது கம்ப்யூட்டரில் உருவாக்கப்பட்ட காட்சிகள் என தெரியவந்துள்ளது. இந்த வீடியோவினை லாஸ் ஏஞ்சல்ஸ் சேர்ந்த காரிடோர் டிஜிட்டல் எனும் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கி இருக்கிறது.

    மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோவில் மனிதர்களும் நடிக்கின்றனர். அந்த வகையில் வைரல் வீடியோவில் இருப்பது உண்மையான ராணுவ ரோபோட் கிடையாது என உறுதியாகிவிட்டது. 

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
    Next Story
    ×