search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி விமான நிலயம் அருகே புகைமூட்டம்
    X
    டெல்லி விமான நிலயம் அருகே புகைமூட்டம்

    டெல்லியில் காற்று மாசால் புகைமூட்டம் - 32 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன

    காற்று மாசால் ஏற்பட்ட புகைமூட்டம் அளவுக்கதிகமாக இருந்ததால் டெல்லியில் இன்று தரையிறங்க வந்த 32 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
    புதுடெல்லி:

    நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்று மாசுபாடு அனுமதிக்க அளவைவிட பன்மடங்கு அதிகரித்ததால் ஒற்றைப்படை இரட்டைப்படை எண்ணுள்ள வாகன போக்குவரத்து முறை கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    இதனால் ஓரளவுக்கு மாசுபாடு குறைந்தாலும் தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் சூழ்ந்த கரியமலம் கலந்த புகையினால் சிலநாட்களாக மீண்டும் காற்று மாசு அபாயகரமான உச்சக்கட்ட நிலையை எட்டியது.

    அருகாமையில் உள்ள அரியானா, பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் நெல் மற்றும் கோதுமை பயிர்களின் அறுவடை முடிந்து ஏராளமான வைக்கோல் தீயிட்டு எரிக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் புகை மூட்டத்தின் எதிரொலியாக தற்போது டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்து சுவாசிக்க தகுதியற்ற அபாயகரமான அளவை எட்டியுள்ளது.

    டெல்லி இந்தியா கேட் பகுதியில் புகை மூட்டம்

    இந்த காற்று மாசினால் சிறார்கள் பாதிக்கப்படாமல் இருக்க நவம்பர்  5ம் தேதி வரை அரசு பள்ளிகள், அரசின் உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.

    இந்நிலையில், இன்று நிலைமை மேலும் மோசமாகி டெல்லியை சுற்றிலும் கடுமையான புகைமூட்டமாக காணப்பட்டது. பொழுது விடிந்து, காலை 10 மணி வரையிலும் சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்கை பயன்படுத்தி மெதுவாக ஊர்ந்து செல்வதை காண முடிந்தது.

    டெல்லி விமான நிலையம் பகுதியிலும் புகைமூட்டம் அதிகமாக இருந்தது. இதனால், அங்கு தரையிறங்க வந்த 32 விமானங்கள் லக்னோ, அம்ரிஸ்டர், ஜெய்ப்பூர் ஆகிய விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    Next Story
    ×