என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பதி கோவில் ஆர்ஜித சேவா டிக்கெட் வெளியீடு
Byமாலை மலர்2 Nov 2019 6:09 AM GMT (Updated: 2 Nov 2019 6:09 AM GMT)
திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் 69,512 ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
திருமலை:
திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் தேவஸ்தான இணையதளத்தில் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது.
அதன் படி நேற்று காலை 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான 69,512 ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை தேவஸ்தானம் இணையளத்தில் வெளியிட்டது. இதை பக்தர்கள் முன்பதிவு செய்து கொண்டு ஏழுமலையானை ஆர்ஜித சேவையில் தரிசிக்கலாம்.
இதில் சுப்ரபாதம் உள்ளிட்ட சில முக்கிய ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டு வருகிறது.
இதைபெற விரும்பும் பக்தர்கள் தங்கள் பெயர், ஆதார் எண், டிக்கெட் எண்ணிக்கை, செல்லிடப்பேசி எண் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு இந்த டிக்கெட்டுகளுக்காக விண்ணப்பிக்க வேண்டும்.
கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும்.
தகவல் கிடைத்த பக்தர்கள் 3 நாட்களுக்குள் தங்கள் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு பெற்றுக் கொள்ளாத டிக்கெட்டுகளை மீண்டும் தேவஸ்தானம் குலுக்கல் முறையில் விண்ணப்பித்த மற்ற பக்தர்களுக்க வழங்குகிறது.
நேரடி முன்பதிவில் உள்ள மற்ற ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை பக்தர்கள் நேரடியாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
குலுக்கள் முறையில் உள்ள டிக்கெட்டுகள் வருமாறு:-
சுப்ரபாதம்-7,332, தோமாலை-120, அர்ச்சனை-120, அஷ்ட தளபாதபத்மாராதனை-240, நிஜபதம்-2,300, மொத்தம்-10,112.
கல்யாண உற்சவம்-13,300, ஆர்ஜித பிரம்மோற்சவம்-7,700, வசந்தோற்சவம்-15,400, ஊஞ்சல்சேவை-4,200, சகஸ்ரதீபாலங்கார சேவை-16,800, விசேஷபூஜை-2,000, மொத்தம்-59,400.

Next Story
×