search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிஎஸ்டி
    X
    ஜிஎஸ்டி

    அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.95,380 கோடி- செப்டம்பர் மாதத்தை விட அதிகம்

    நடப்பு நிதியாண்டில் அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.95,380 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தைவிட அதிகம் வசூலாகி உள்ளது.
    புதுடெல்லி:

    அக்டோபர் மாதம் வசூலான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பான தகவலை மத்திய நிதித்துறை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் மாதத்தில் மொத்தம் 95,380 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலாகி உள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.17,582 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.23,674 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.46,517 கோடி (இறக்குமதி வரி ரூ.21446 கோடி உள்பட) ஆகும். 

    செஸ் எனப்படும் கூடுதல் வரி ரூ.7,607 கோடி வசூலாகி உள்ளது. இதில், இறக்குமதி மீதான ரூ.774 கோடி வரியும் அடங்கும். மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் செப்டம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் ரூ.2536 கோடி அதிகம் ஆகும்.

    செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை மொத்தம் 73.83 லட்சம் பேர் ஜிஎஸ்டிஆர் 3பி ரிட்டன் தாக்கல் செய்துள்ளதாகவும் நிதித்துறை தெரிவித்துள்ளது. 
    Next Story
    ×