search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல்
    X
    ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல்

    ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் நாளை டெல்லி வருகை - பிரதமர் மோடியுடன் சந்திப்பு

    அரசுமுறை பயணமாக நாளை இந்தியா வரவிருக்கும் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார்.
    புதுடெல்லி:

    ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் அந்நாட்டின் 12 துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் குழுவினருடன் நாளை இந்தியா வருகிறார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார் என இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜெ லின்ட்னெர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பத்திரிக்கையாளர்களுக்கு இன்று லின்ட்னெர் அளித்த பேட்டியில், அதிபர் ஏஞ்சலா மெர்கெல் நாளை (அக்டோபர் 31) மாலை இந்தியா வந்தடைவார். இருதரப்பு உறவுகள் குறித்து இந்திய பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

    பிரதமர் மோடியுடன் ஏஞ்சலா மெர்கெல் (கோப்பு படம்)

    ஜெர்மனி அரசின் 12 அமைச்சகங்களை சேர்ந்த முக்கிய அதிகாரிகளும் அதிபருடன் வருகின்றனர். செயற்கை நுண்ணறிவு, நிலையான வளர்ச்சி, நகர்ப்புற இயக்கம், விவசாயம் மற்றும் கால்பந்து ஆகிய துறைகளை பற்றி இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்படும். இரு நாடுகளுக்கிடையே சுமார் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.
     
    இருநாட்டு பிரதமர்கள் இடையிலான சந்திப்பில் காஷ்மீர் பிரச்சனை பற்றி விவாதிக்கப்படுமா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, ’இரு தலைவர்களுக்கும் இடையே நல்ல நட்புணர்வு உள்ளது. ஆகவே, அவர்கள் எந்த விவகாரத்தை குறித்தும் விவாதிக்கலாம் என அவர் குறிப்பிட்டார்.
     
    Next Story
    ×