search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு - அயோத்தி, ரபேல், சபரிமலை வழக்குகளில் விரைவில் தீர்ப்பு

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் 17-ந்தேதி ஓய்வு பெறுவதால், அயோத்தி, ரபேல், சபரிமலை உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் 17-ந்தேதிக்கு முன்பு தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நவம்பர் 17-ந்தேதி ஓய்வு பெறுகிறார். அதனால், அவர் விசாரித்து, தீர்ப்பை தள்ளி வைத்த வழக்குகளில், 17-ந்தேதிக்கு முன்பு தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.

    தற்போது, சுப்ரீம் கோர்ட்டுக்கு தீபாவளி விடுமுறை ஆகும். இந்த விடுமுறை முடிந்து, 4-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் திறக்கப்படுகிறது. அதன்பிறகு, 2 நாட்கள் விடுமுறை வருகிறது.

    எனவே, 17-ந்தேதிக்கு முன்பாக, 8 அலுவல் நாட்கள்தான் உள்ளன. இந்த 8 நாட்களில், பரபரப்பான முக்கிய வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

    அவற்றில் முக்கியமானது, அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு. 40 நாட்கள் தொடர் விசாரணைக்கு பிறகு, கடந்த 16-ந்தேதி இவ்வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. தலைமை நீதிபதி தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பு அளிக்க உள்ளது.

    ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் மத்திய அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரித்து கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அதை மறுஆய்வு செய்யக்கோரி, முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளிக்கிறது.

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரும் மனு மீது தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பு அளிக்கிறது.

    ரபேல் விவகாரத்தில் ‘காவலாளியே திருடன்’ என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தவறான குற்றச்சாட்டு தெரிவித்ததாக தொடரப்பட்ட கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
    Next Story
    ×