search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வருமான வரித்துறை
    X
    வருமான வரித்துறை

    டெல்லி நிறுவனம் ரூ.1,000 கோடி வரி ஏய்ப்பு - வருமான வரி சோதனையில் கண்டுபிடிப்பு

    டெல்லி நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. அதில், ரூ.1,000 கோடிக்கு வரி ஏய்ப்பு, ‘ஹவாலா’ பண பரிமாற்றத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள அலங்கிட் வர்த்தக குழுமம், இ-நிர்வாகம் தொடர்பான திட்டங்களிலும், நிதி சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் பல நகரங்களிலும், துபாயிலும் அந்த நிறுவனம் கிளைகள் வைத்துள்ளது. அந்த நிறுவனம், சட்டவிரோத ‘ஹவாலா’ பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக வருமான வரித்துறையின் கண்காணிப்பு வளையத்தில் இருந்தது.

    இந்நிலையில், அந்த நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. அதில், ரூ.1,000 கோடிக்கு வரி ஏய்ப்பு, ‘ஹவாலா’ பண பரிமாற்றத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. கணக்கில் காட்டாத கருப்பு பணத்தை பயன்படுத்த போலி நிறுவனங்களை பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    மேலும், ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் சிக்கிய துபாய் தொழிலதிபர் ராஜீவ் சக்சேனாவின் போலி நிறுவனம் மூலமாக துபாயில் கமிஷன் பணம் பெறப்பட்டதும், அதில் ஒரு பகுதி, சட்டவிரோத பண பரிமாற்றம் மூலம் அலங்கிட் குழுமம் வழியாக இந்தியாவுக்கு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
    Next Story
    ×