search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பட்டதாரிகள்
    X
    பட்டதாரிகள்

    பொறியியல் பட்டதாரிகள் அதிக வேலை வாய்ப்பு பெறும் மாநிலம் இதுதான்

    இந்தியாவில் பொறியியல் பட்டதாரிகள் வேலை வாய்ப்பு பெறும் மாநிலங்கள் தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் பட்டியல் வெளியிட்டுள்ளது.
    கொல்கத்தா:

    உலக அளவில் கல்வித்துறையில் மருத்துவம் மற்றும் பொறியியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பள்ளிப்படிப்பை முடிக்கும் பெரும்பாலான மாணவர்கள் மருத்துவம், பொறியியல் துறைகளையே தேர்ந்தெடுக்கின்றனர்.

    ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக பொறியியல் துறையில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. பட்டப்படிப்பை முடித்த அனேக பொறியாளர்கள் வெவ்வேறு துறைகளில் கிடைத்த வேலையை செய்து வருகின்றனர். தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் வெகுவாக குறைந்துள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், இந்தியாவில் பொறியாளர்கள் அதிகமாக வேலை பெறும் மாநிலமாக மேற்கு வங்காளம் உள்ளதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது.

    அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, மேற்கு வங்காளத்தில் 2018-2019 நிதியாண்டில் படித்து முடித்த 53,791 பொறியியல் பட்டதாரிகளில் 27,675 பேருக்கு, அதாவது 51.45 சதவீதம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. 

    வேலை கிடைக்கப்பெறும் சதவீதம் ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக உயர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. 2016-2017 ஆண்டில் 43.3%, 2017-2018 ஆண்டில் 48.46% ஆகவும் இருந்தது. 

    இது உத்தரபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களை விட மிக அதிக ஆகும். மேற்கண்ட மாநிலங்களிலே அதிகமான எண்ணிக்கையில் மாணவர்கள் சேருகிறார்கள், ஆனால் குறைந்த சதவீதத்தினரே வேலை பெறுகிறார்கள்.

    உதாரணமாக, குஜராத்தில், 2018-19ல் சேர்க்கை பெற்ற 90,000 மாணவர்களில், 24,636 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்தது. உத்தரபிரதேசத்தில், சுமார் 1.83 லட்சம் பொறியியல் பட்டதாரிகளில், சுமார் 68,000 பேருக்கு வேலை கிடைத்தது. தமிழ்நாட்டில், 2.5 லட்சத்தில் 1,81,721 பேருக்கு வேலை கிடைத்தது, எனவும் இந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 

    இந்தியாவின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளில் சில மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×