search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்
    X
    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

    இது இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு ஏவுகணையா? வைரல் வீடியோவின் பரபர பின்னணி

    சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவில் இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை பற்றிய விவரங்களின் பரபர பின்னணியை பார்ப்போம்.



    சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவில் உள்ள பரபர காட்சிகள் இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை என கூறப்பட்டுள்ளது. வீடியோவில் இரவு நேரத்தில் வானில் மின்னல் கிழிப்பது போன்ற காட்சிகளும், பின்னணியில் தோட்டா வெடிக்கும் சத்தமும் கேட்கிறது.

    இத்துடன் கருப்பு நிற புகையும் தெரிகிறது. பின் வானில் இருந்து எரிந்துபோன துகள்கள் தரையில் விழும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. செப்டம்பர் 13 ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் வீடியோவினை இதுவரை பல ஆயிரம் பேர் பகிர்ந்துள்ளனர்.

    வீடியோவில் உள்ளதை போன்று அதில் உள்ள காட்சிகள் வெடிகுண்டு பற்றியது இல்லை என தெரியவந்துள்ளது. உண்மையில்  வீடியோவில் இருப்பது கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டதாகும். இவை வீடியோ கேமிற்காக உருவாக்கப்பட்டதாகும். இதே வீடியோவினை பலர் இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை என்றே யூடியூபிலும் பதிவேற்றம் செய்திருக்கின்றனர்.

    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    அதுபோன்ற வீடியோக்களில் சிலர் வீடியோ காட்சிகள் ஆர்மா 3 எனும் வீடியோ கேமில் இருந்து எடுக்கப்பட்டது என கருத்து தெரிவித்துள்ளனர். இதன்பின் மேற்கொள்ளப்பட்ட இணைய தேடல்களில் இதே வீடியோவின் பல வீடியோ கேம் சார்ந்த யூடியூப் சேனல்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஜூன் 24, 2019 இல் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. வீடியோக்களை உற்று நோக்கும் போது அவை கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் என்பது தெளிவாக தெரிகிறது. அந்த வகையில் வைரல் வீடியோவில் உள்ளது இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன.
    Next Story
    ×