search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பசு மாடுகள்
    X
    பசு மாடுகள்

    வைக்கோலுக்கு பதிலாக சிக்கன், மீன் தின்னும் பசு மாடுகள்

    கோவா மாநிலத்தில் சாலைகளில் சுற்றித்திரிந்த பசு மாடுகள் சிக்கன், மட்டன் மற்றும் மீன் வறுவல் உள்ளிட்ட அசைவ உணவுகளை மட்டும் தான் தின்கின்றன.
    பனாஜி:

    கோவா மாநிலத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் பசு மாடுகள் பனாஜியில் உள்ள கோசாலைக்கு கொண்டு சென்று பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கலங்கட் என்ற பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த 76 பசு மாடுகள் அங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த மாடுகள் சிக்கன், மட்டன் மற்றும் மீன் வறுவல் உள்ளிட்ட அசைவ உணவுகளை மட்டும் தான் தின்கின்றன. வழக்கமான கால்நடை தீவனங்களான புல், வைக்கோல் மற்றும் கோசாலையில் வழங்கப்படும் சிறப்பு உணவுகளை அந்த மாடுகள் தின்பது இல்லை.

    சாலைகளில் சுற்றித்திரியும் பசு மாடுகள்

    ஏனெனில் இவை சாலைகளில் சுற்றித்திரிந்த போது ஓட்டல்களில் இருந்து கொட்டப்படும் குப்பையில் உள்ள சிக்கன், மீன் வறுவல் ஆகியவற்றை தின்று பழகி இருப்பதே இதற்கு காரணமாகும். இந்த தகவலை ஒரு விழாவில் பங்கேற்ற கோவா மாநில மந்திரி மைக்கேல் லோபோ தெரிவித்தார்.

    மேலும் கோசாலை நிர்வாகிகள் அந்த மாடுகளின் தீவன பழக்கத்தை அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாற்றுவதற்கான சிகிச்சை அளிக்க, கால்நடை டாக்டர்களை அணுகி இருக்கின்றனர்.

    Next Story
    ×