search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளா மழை
    X
    கேரளா மழை

    கேரளாவில் 6 மாவட்டங்களில் கனமழை - பம்பையாற்றில் வெள்ளப்பெருக்கு

    கேரளாவில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பம்பையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் பெய்து வரும் மழை காரணமாக கேரள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அங்கு உள்ள சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல ஓடுகிறது. திருவனந்தபுரம் கரமனை ஆற்றிலும் அதிக அளவு தண்ணீர் செல்கிறது.

    அதேப்போல ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம் ஆகிய 6 மாவட்டங்களிலும் கனமழை நீடிக்கிறது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் உள்ள ஆறுகளிலும் அதிக அளவு தண்ணீர் செல்கிறது.

    சபரிமலையிலும் மழை நீடிக்கிறது. இங்குள்ள புனித நதியான பம்பையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதனால் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் பாதுகாப்பாக பம்பையாற்றில் நீராடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

    கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×