search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரபிரதேச மாநிலம் தேவ்பந்த் நகர பா.ஜனதா தலைவர் காஜ்ராஜ்ரானா
    X
    உத்தரபிரதேச மாநிலம் தேவ்பந்த் நகர பா.ஜனதா தலைவர் காஜ்ராஜ்ரானா

    பாத்திரங்களுக்கு பதிலாக பட்டாக் கத்தியை வாங்குங்கள்- உ.பி. பா.ஜனதா தலைவர் சர்ச்சை பேச்சு

    தீபாவளி பண்டிகையின் போது இந்துக்கள் பாத்திரங்களுக்கு பதிலாக இரும்பிலான பட்டாக் கத்தியை வாங்குங்கள் என்று உத்தரபிரதேச மாநிலம் தேவ்பந்த் நகர பா.ஜனதா தலைவர் காஜ்ராஜ்ரானா கூறியுள்ளார்.
    லக்னோ:

    வட மாநிலங்களில் தீபாவளி பண்டிகை மிகவும் விமர்சையாக சில தினங்கள் கொண்டாடப்படும்.

    தீபாவளிக்கு முந்தைய தினங்களில் ‘தந்தேரஸ்’ கொண்டாடப்படும், இந்த ஆண்டில் வருகிற 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    தந்தேரசின் போது வீட்டு உபயோக பொருட்கள், தங்கம், வெள்ளி பொருட்கள், பாத்திரங்கள் வாங்குவது வழக்கம்.

    இந்த ஆண்டில் ‘தந்தேரஸ்’ கொண்டாட்டத்துக்காக இந்துக்கள் பாத்திரங்களுக்கு பதிலாக இரும்பிலான பட்டாக் கத்தியை (வாள்) வாங்குங்கள் என்று உத்தரபிரதேச மாநிலம் தேவ்பந்த் நகர பா.ஜனதா தலைவர் காஜ்ராஜ்ரானா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அயோத்தி வழக்கில் விரைவில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராமர் கோவில் கட்டுவதற்கு சாதகமான தீர்ப்பு வரும் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். ஆனாலும் மோசமான சூழ்நிலை ஏற்பட்டால் அதை சமாளிக்க பட்டாக்கத்திகளை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறேன்.

    ‘தந்தேரஸ்’ கொண்டாட்டத்துக்காக தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் வாங்குவதற்கு பதிலாக உங்கள் பாதுகாப்புக்காக வாள்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அவரது இந்த கருத்து மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து காஜ்ராஜ் ரானா கூறும் போது “நான் எந்த ஒரு சமூகத்துக்கோ அல்லது மதத்துக்கு எதிராகவோ பேசவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.

    இந்த நிலையில் ரானாவின் இந்த கருத்தை பா.ஜனதா நிராகரித்து உள்ளது.
    Next Story
    ×