search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு அந்தேரி தொகுதியில் வாக்களித்த நடிகை ஹேமா மாலினி
    X
    மேற்கு அந்தேரி தொகுதியில் வாக்களித்த நடிகை ஹேமா மாலினி

    ஒருமணி நிலவரம்: அரியானாவில் 35.40 மகாராஷ்டிராவில் 30.89 சதவீதம் வாக்குப்பதிவு

    அரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பிற்பகல் ஒருமணி நிலவரப்படி 35.40 மற்றும் 30.89 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளிலும், அரியானாவில் உள்ள 90 தொகுதிகளிலும் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

    இதுதவிர  தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதி உள்பட நாடு முழுவதிலும் உள்ள 51 சட்டசபை தொகுதிகளுக்கும், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சதாரா பாராளுமன்ற தொகுதிக்கும், பீகார் மாநிலம் சமஸ்திபூர் நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
     
    சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் காலை 9 மணி வரை குறைந்த அளவிலான வாக்குகளே பதிவாகியிருந்தன. அரியானாவில் 8.73 சதவீத வாக்குகளும், மகாராஷ்டிராவில் 5.46 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தது. அதன்பின்னர் வாக்குப்பதிவு சதவீதம் படிப்படியாக உயர்ந்தது.

    இந்நிலையில், பிற்பகல் ஒருமணி நிலவரப்படி அரியானாவில் 35.40 சதவீதம் வாக்குகளும் மகாராஷ்டிராவில் 30.89 சதவீதம் வாக்குகளும் பதிவாகின.

    மகாராஷ்டிராவில் இன்று வாக்களித்த மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி

    இரு மாநிலங்களுக்கு உட்பட்ட அனைத்து தொகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சில வாக்குச்சாவடிகளில் இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு வேட்பாளர்களின் ஆட்சேபனைக்கு பின்னர் மாற்று வாக்கு எந்திரங்கள் பொருத்தப்பட்டன.

    அம்மாநில தலைநகர் மும்பைக்கு உட்பட்ட தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளில் பிரபல பாலிவுட் நடிகர், நடிகைகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வாக்களித்தனர்.
     
    Next Story
    ×