search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    சட்டசபை தேர்தல்: மராட்டியம்-அரியானாவில் நாளை ஓட்டுப்பதிவு

    சட்டசபை தேர்தல் நடைபெறும் மராட்டியம்- அரியானாவில் நாளை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளதால் 75 ஆயிரம் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
    மும்பை:

    மராட்டியம், அரியானா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டசபை பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து மராட்டியம், அரியானா ஆகிய மாநிலங்களில் மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    இரு மாநிலங்களிலும் நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இத்துடன் மாநிலங்களில் காலியாக உள்ள 64 சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் நடக்கிறது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 11 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

    சட்டசபை தேர்தல் நடைபெறும் மராட்டியம்- அரியானா இரு மாநிலங்களிலுமே தற்போது பாரதீய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.
    இரு மாநிலங்களிலும் முக்கிய எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. எனவே, இந்த இரு கட்சிகளும் ஆட்சியை பிடிப்பதற்கு போராடி வருகின்றன.
     
    மராட்டியத்தில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 288. ஆளும் கட்சியான பாரதீய ஜனதா- சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரசும், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசும் கூட்டணி அமைத்துள்ளன.

    பாரதீய ஜனதா 152 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகள் 12 தொகுதி களிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி 145 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 123 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

    கடந்த தேர்தலில் பிரதான 4 கட்சிகளுமே தனித்து போட்டியிட்டன. அப்போது பாரதீய ஜனதா 122 இடங்களிலும், சிவசேனா 63 இடங்களிலும், காங்கிரஸ் 42 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆனால், இந்த தேர்தலில் இரு அணிகளாக வலுவான கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    பாரதீய ஜனதாவுக்காக மோடி, அமித்ஷா, பட்னா விஸ், ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, ஸ்மிருதிராணி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத் என பெரிய தலைவர்கள் பட்டாளமே பம்பரமாக சுழன்று வந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்ய தாக்கரே ஆகியோரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    ஆனால், காங்கிரஸ் தரப்பில் அவ்வளவாக எழுச்சியான பிரசாரம் இல்லை. ராகுல் காந்தி மட்டும் ஒன்றிரண்டு தொகுதியில் பிரசாரம் செய்தார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் சில பகுதிகளுக்கு சென்று பிரசாரம் மேற்கொண்டார். 

    மராட்டியத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 8 கோடியே 98 லட்சத்து 39 ஆயிரத்து 600. நாளை அனைத்து தொகுதிகளிலுமே ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கிறது. பல தொகுதிகள் பதட்ட மானவையாக அறிவிக்கப்பட்டு உள்ளன. எனவே அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

    அரியானா மாநிலத்தில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 90. இங்கு பாரதீய ஜனதா, காங்கிரஸ், சவுதாலாவின் இந்திய தேசிய லோக்தளம் ஆகிய 3 கட்சிகள் தனித்தனியாக களத்தில் உள்ளன. இதுதவிர, பகுஜன் சமாஜ் கட்சியும் முக்கிய கட்சியாக போட்டியிடுகிறது. ஆனா லும், பாரதீய ஜனதா- காங்கிரஸ் இடையேதான் கடும் போட்டி நிலவி வருகிறது.
     
    தற்போது பாரதீய ஜனதா- காங்கிரஸ் இரு கட்சிகளுமே 90 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. 
    இந்திய தேசிய லோக்தளம் 81 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 87 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மொத்தம் 1169 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். இந்த மாநிலத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1 கோடியே 82 லட்சத்து 98 ஆயிரத்து 714. மொத்தம் 19 ஆயிரத்து 425 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 75 ஆயிரம் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 
     பாஜக
    கடந்த தேர்தலில் பாரதீய ஜனதா 47 இடங்களிலும், லோக்தளம் கட்சி19 இடங் களிலும், காங்கிரஸ் 15 இடங்களிலும் வெற்றி பெற்றன. அதற்கு முன்பு காங்கிரசிடம் இருந்து ஆட்சியை பாரதீய ஜனதா கைப்பற்றியது. இந்த தடவை மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிரமாக முயற்சித்து வருகிறது. இந்த கட்சியின் முக்கிய தலைவரான பூபிந்தர் சிங்கூடா மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். ராகுல்காந்தியும் ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் பிரசாரம் செய்தார். 

    அதே நேரத்தில் பாரதீய ஜனதா சார்பில் மோடி, அமித்ஷா ஆகியோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். இந்த தேர்தலில் எப்படி யாவது 70 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா திட்டங்களை வகுத்து தேர்தல் பணிகளை செய்துள்ளது. தற்போதைய கருத்து கணிப்பில் மராட்டியம், அரியானா இரு மாநிலங் களிலுமே பாரதீய ஜனதா கட்சியே அதிக இடங்களை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×