search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செம்மரக்கட்டைகள்
    X
    செம்மரக்கட்டைகள்

    செம்மரம் கடத்தல் - வனத்துறை ஊழியர்கள் உள்பட 5 பேர் கைது

    திருப்பதி அருகே செம்மரம் கடத்திய 2 வனத்துறை ஊழியர்கள் உள்பட 5 பேரை கைது செய்த வனத்துறையினர், 20 செம்மரங்களை பறிமுதல் செய்தனர்.
    திருப்பதி:

    திருப்பதி அருகே உள்ள எர்ரவாரி பாளையம், பாக்ராப் பேட்டை உள்ளிட்ட வனப்பகுதியில் விலை உயர்ந்த செம்மரங்கள் வளர்ந்துள்ளன. இப்பகுதியில் மாவட்ட வன அலுவலர் நாகார்ஜூன் ரெட்டி தலைமையில் வனத்துறையினர் நேற்று எர்ரவாரி பாளையம் வனப்பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது ஒரு கும்பல் செம்மரங்களை வெட்டி கடத்த தயார் நிலையில் இருந்தனர். அவர்களை கண்ட வனத்துறையினர் சரணடையும்படி எச்சரிக்கை விடுத்தனர்.

    ஆனால் கடத்தல் கும்பல் தப்பி ஓடினர். அவர்களை விரட்டி சென்ற வனத்துறையினர் 5 பேரை மடக்கி பிடித்தனர்.

    பிடிபட்டவர்களை வனத்துறை அலுவலகம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அதில் கடத்தல் கும்பலில் முன்னாள் வனத்துறை ஊழியர்கள் 2 பேர் இருந்தது தெரியவந்தது.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் எர்ரவாரி பாளையத்தை சேர்ந்த ரெட்டி பிரசாத் (வயது28), ஸ்ரீநாத்(30) எனவும், இவர்களுக்கு வனத்துறையில குறைவான ஊதியம் கொடுத்ததால் வேலையை ராஜினாமா செய்து விட்டு செம்மரம் கடத்தலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

    மேலும் பீலேருவை சேர்ந்த தனஞ்செழியன் (30), நஞ்சம்பேட்டை ஷேக்‌ஷகில்(25), நிரபைலு சிவசங்கர் என தெரியவந்தது.

    5 பேரையும் கைது செய்த வனத்துறையினர் அவர்கள் கடத்த வைத்திருந்த 20 செம்மரங்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய கும்பலை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×