search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    காஷ்மீருக்குள் 100 பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் திட்டம்- உளவுத்துறை எச்சரிக்கை

    குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பே ஆப்கானிஸ்தானில் இருந்து 100 பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் அனுப்பி வைக்க பாகிஸ்தான் திட்டம் வகுத்துள்ளது.
    புதுடெல்லி:

    காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவு நீக்கியதை தொடர்ந்து அங்கு வன்முறையை ஏற்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

    அதற்காக பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவ செய்ய திட்டம் வகுத்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

    அதற்காக எல்லையில் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி அந்நாட்டு ராணுவம் தேவையற்ற தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஆனால் இந்திய ராணுவம் அதை முறியடித்து வருகிறது.

    பொதுவாக குளிர்காலத்தின்போது காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தனது பயங்கரவாத நடவடிக்கைகளை குறைத்து கொள்ளும். ஏனெனில் அங்கு அடர்ந்த பனிப்பொழிவு ஏற்படும்.

    எனவே குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பே ஆப்கானிஸ்தான் எல்லையில்  முகாமிட்டுள்ள பயங்கரவாதிகள் 100 பேரை காஷ்மீருக்குள் ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் திட்டம் வகுத்துள்ளது. அதன் மூலம் காஷ்மீரில் வன்முறையை நிகழ்த்தி ரத்தக் குளியல் நடத்த தீவிர திட்டம் தீட்டியுள்ளது.

    மேலும் லிபா என்ற இடத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் 15 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ தயாராக உள்ளனர். இவர்களுடன் மேலும் 100 பயங்கரவாதிகளை இன்னும் சில வாரங்களில் ஊடுருவச் செய்து கலவரம் ஏற்படுத்தவும்   திட்டமிட்டுள்ளது.

    காஷ்மீர் மட்டுமின்றி இந்தியாவின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தவும் பயங்கரவாதிகள் முடிவு செய்துள்ளனர். இந்த தகவலை இந்திய உளவுத்துறை உறுதி செய்து எச்சரித்துள்ளது.
    Next Story
    ×