search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பையில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி
    X
    மும்பையில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி

    மகாராஷ்டிரா, அரியானாவில் இன்று பிரச்சாரம் ஓய்கிறது- தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு

    மகாராஷ்டிரா மற்றும் அரியானா சட்டசபை தேர்தலில் அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்வதால் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்கிறது. இங்கு சட்டசபை தேர்தலை ஆளும் பா.ஜனதா - சிவசேனா கட்சிகள் கூட்டணி வைத்து சந்திக்கின்றன. அதேபோல பிரதான எதிர்க்கட்சிகளான காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் கைகோர்த்து இழந்த ஆட்சியை கைப்பற்ற தேர்தல் களத்தில் மல்லுகட்டுகின்றன. 

    ராஜ்தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதுதவிர பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி, பகுஜன் சமாஜ், ஐதராபாத் எம்.பி. ஒவைசியின் எம்.ஐ.எம். கட்சிகளும் களத்தில் உள்ளன. 

    இதேபோல் 90 தொகுதிகளைக் கொண்ட அரியானாவிலும் நாளை மறுநாள் தேர்த்ல நடைபெற உள்ளது. இங்கு ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

    அரியானாவில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி

    இரு மாநிலங்களிலும் கடந்த சில தினங்களாக மோடி, ராகுல் காந்தி, அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் அனல்பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதனால் இன்று அரசியல் கட்சிகளின் தலைவர்களும், வேட்பாளர்களும் தங்களது இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

    இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 24-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே அனைத்து தொகுதிகளின் முடிவுகளும் அறிவிக்கப்படுகின்றன.
    Next Story
    ×