search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங்
    X
    பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங்

    இம்ரான் கானுக்கு பஞ்சாப் முதல் மந்திரி திடீர் கடிதம்

    இந்தியாவில் இருந்து கர்தார்பூருக்கு வரும் சீக்கிய பக்தர்களுக்கு நுழைவு கட்டணம் விதிக்கும் நடைமுறையை திரும்பப்பெற வேண்டுமென இம்ரான்கானை பஞ்சாப் முதல் மந்திரி வலியுறுத்தியுள்ளார்.
    சண்டிகர்:

    பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் 500 ஆண்டுகள் பழமையான குருத்வாரா உள்ளது. அங்கு சீக்கியர்கள் புனித பயணம் செல்வது வழக்கம். 

    அதற்காக, அங்கிருந்து இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் ஆலயம் வரை பாதை அமைக்க இந்தியாவும், பாகிஸ்தானும் முடிவு செய்தன. அதன்படி, இரு நாடுகளும் அவரவர் பகுதியில் பாதை அமைத்துள்ளன.
     
    சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவ் 550-வது பிறந்தநாள் நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் வருவதற்காக, கர்தார்பூர் பாதையை திறந்து விடத் தயார் என்று பாகிஸ்தான் அறிவித்திருந்தது. அன்றாடம் 5 ஆயிரம் இந்திய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

    இதற்கிடையில், தங்கள் நாட்டிற்கு கர்தார்பூர் சாலை வழியாக வரும் இந்தியாவை சேர்ந்த சீக்கிய பக்தர்கள் நுழைவு கட்டணமாக 20 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1420) செலுத்த வேண்டுமென பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது. 

    இம்ரான்கான் மற்றும் பாகிஸ்தானில் உள்ள சீக்கிய புனித தளம்

    இந்நிலையில், பஞ்சாப் மாநில முதல் மந்திரி அமரீந்தர் சிங்  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு டுவிட்டர் மூலம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

    இது குறித்து அவர் வெளியிட்ட செய்தியில், 'இந்தியாவில் இருந்து கர்தார்பூரில் உள்ள குருத்வாராவிற்கு வரும் சீக்கியர்களுக்கு 20 டாலர்கள் நுழைவு கட்டணமாக விதிக்கவிருக்கும் பாகிஸ்தானின் நடைமுறையை பிரதமர் இம்ரான்கான் பரந்த மனப்பான்மையுடன் திரும்ப பெற்று சீக்கிய மத குரு குருநானக்கின் இறுதி ஓய்விடமான குருத்வாராவை இலவசமாக தரிசிக்க அனுமதி வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். அவ்வாறு நுழைவு கட்டண நடைமுறை திரும்ப பெற்றால் உலகில் உள்ள சீக்கியச் சமூகம் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கும்.’ என தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×