search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    பாகிஸ்தான் - காங்கிரஸ் இடையே உள்ள கெமிஸ்டிரி என்ன? பிரதமர் மோடி கேள்வி

    காங்கிரசாரின் கருத்தக்களை எல்லாம் பாகிஸ்தான் மிக அழுத்தமாக பிடித்துக்கொள்ளும் நிலையில் அந்நாட்டுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே உள்ள வேதியியல் தொடர்பு என்ன? என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
    சண்டிகர்:

    அரியானா மாநில சட்டசபை தேர்தல் வரும் 21-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றவேண்டுமேன காங்கிரஸ், பாஜக உள்பட பல்வேறு கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறது.

    இந்நிலையில், அம்மாநிலத்தின் சோனிபேட் பகுதியில் இன்று பாஜக-வுக்கு ஆதரவாக பிரதமர் மோடி இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்யப்பட்டது நாட்டு நலன் கருதி எடுக்கப்பட்ட முக்கிய முடிவாகும்.  ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என யாருமே நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள்.

    கடந்த 70 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளின் 
    வளர்ச்சிக்கு தடையாக சிறப்பு சட்டம் இருந்து வந்தது. ஆகையால், நாம் அந்த சட்டத்தை நீக்கிவிட்டோம். 

    இந்த நடவடிக்கையால் காங்கிரஸ் மற்றும் அவர்களை போன்ற கட்சிகள் மிகவும் வலியில் உள்ளன. அந்த வலியை தீர்க்க மருந்தே கிடையாது. 

    தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி

    காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினரின் பேச்சினை பாகிஸ்தான் நாட்டினர் மிகவும் விரும்புகின்றனர். அக்கட்சியினர் இந்தியர்கள் விரும்பும் விதமாக வலிமையுடன் பேச வேண்டும். ஆனால், காங்கிரஸ் கட்சியினரின் பேச்சு பாகிஸ்தானுக்கு உதவிகரமாக இருக்கிறது. 

    காஷ்மீர் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் வெளியிடும் தவறான தகவல்கள், அறிக்கை மற்றும் பேச்சுக்களை உலக அரங்கில் பாகிஸ்தான் அப்படியே வலுவாக எடுத்துவைக்கிறது. 

    பாகிஸ்தானுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே என்ன கெமிஸ்டிரி நிலவுகிறது? யாருக்காக இந்த கெமிஸ்டிரி?. வாக்களிக்கும் போது நீங்கள் இந்த கேள்விகளுக்கான பதில்களை கண்டுபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×