search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண்ணீர்புகை குண்டு வீடியோ ஸ்கிரீன்ஷாட்
    X
    கண்ணீர்புகை குண்டு வீடியோ ஸ்கிரீன்ஷாட்

    கண்ணீர்புகை குண்டு வீச்சு வைரல் வீடியோ காஷ்மீரில் எடுக்கப்பட்டதா?

    சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவில் கண்ணீர்புகை குண்டு வீசப்படும் காட்சிகள் காஷ்மீரில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.



    காஷ்மீர் பற்றிய வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிடுகின்றன. இவ்வாறு வைரலாகும் வீடியோக்களில் சிலவற்றில் போலி விவரங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

    அந்த வகையில் ஃபேஸ்புக்கில் வைரலாகும் வீடியோ ஒன்றில் போலீசார் கண்ணீர்புகை குண்டு வீசும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த சம்பவம் காஷ்மீரில் அரங்கேறியதாக கூறப்படுகிறது. 

    மாணவர்கள் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை பயன்படுத்தியதாக ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த வீடியோ பிபிசி நியூஸ் காஷ்மீர் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இதனால் பலர் இதனை பகிர துவங்கினர். 

    ஆனால் வைரல் வீடியோவில் குறிப்பிடப்பட்டிருப்பதை போன்று இந்த சம்பவம் காஷ்மீரில் எடுக்கப்பட்டதல்ல என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் இந்தோனேசியாவின் ஜகார்டா எனும் பகுதியில் நடைபெற்றிருக்கிறது. பிபிசி நியூஸ் காஷ்மீர் லோகோ போட்டோஷாப் மூலம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    மூன்று நிமிடங்களுக்கு மேல் ஓடும் வீடியோவில் போலீசார் தாக்குதலுக்கு தயாராகும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. வீடியோவில் உள்ள போலீசாரின் பாதுகாப்பு கவசங்களில் பொலிசி என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கிறது.  

    சம்பவம் பற்றி இணையத்தில் தேடியபோது, ரஷ்யான் இன்டர்நேஷனல் தொலைக்காட்சி நெட்வொர்க் இந்த வீடியோவினை அக்டோபர் 1, 2019 அன்று பதிவேற்றம் செய்திருக்கிறது. வீடியோ தலைப்பில் இந்தோனேசிய மாணவர்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை பயன்படுத்துகின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    அந்த வகையில் வைரல் வீடியோவில் குறிப்பிடப்பட்டிருப்பதை போன்று இந்த சம்பவம் காஷ்மீரில் நடைபெறவில்லை என்பதும், இதனை பிபிசி நியூஸ் காஷ்மீர் வெளியிடவில்லை என்பதும் தெளிவாகியுள்ளது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி தகவல்களில் பலர் பாதிக்கப்படுகின்றனர். போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தகவல்களின் உண்மைத் தன்மை அறியாமல் அவற்றை பகிர வேண்டாம்.
    Next Story
    ×