search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை பணிகளை ஆய்வு செய்த மந்திரி
    X
    சாலை பணிகளை ஆய்வு செய்த மந்திரி

    ஹேமமாலினி கன்னம் போல் ம.பி. சாலைகள் பளிச்சென மாறும் - மந்திரி பேச்சால் சர்ச்சை

    மத்திய பிரதேசத்தில் நடிகை மற்றும் எம்.பி.யான ஹேமமாலினியின் கன்னம் போன்று சாலைகள் பளிச்சென அழகாக்கப்படும் என அம்மாநில மந்திரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    போபால்:

    மத்திய பிரதேசம் மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.  அவரது அமைச்சரவையில் சட்ட மந்திரியாக இருப்பவர் பி.சி. சர்மா.  இவர் பொதுப்பணித்துறை மந்திரி சஜ்ஜன் வர்மா உடன் ஹபீப்கஞ்ச் ரெயில் நிலையம் அருகே சாலை ஆய்வுப் பணிக்காக சென்றிருந்தார்.

    கடந்த 2 வருடங்களுக்கு முன் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடந்தபொழுது, வாஷிங்டன் நகரை விட மேம்பட்ட சாலைகள் இங்குள்ளன என சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியிருந்தார். 

    இந்நிலையில், சாலைகளை ஆய்வு செய்த பி.சி. சர்மா கூறுகையில், வாஷிங்டன் மற்றும் நியூயார்க் போன்று அமைக்கப்பட்ட சாலைகளுக்கு ஒரு மழையில் என்னவாகி விட்டது? என கேள்வி எழுப்பினார்.

    அத்துடன், சின்னம்மை வியாதி வந்ததுபோல் குண்டும் குழியாக இந்த சாலைகள் கைலாஷ் விஜய்வர்கியாவின் (பா.ஜ.க. பொது செயலாளர்) கன்னங்கள் போன்று காணப்படுகின்றன என்றார்.

    மேலும், முதல் மந்திரி கமல்நாத் உத்தரவின் பேரில், வர்மாஜி தலைமையில் 15 நாட்களில் சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அவை 15 முதல் 20 நாட்களில் ஹேமமாலினியின் கன்னங்கள் போன்று பளிச்சென அழகாக்கப்படும் என தெரிவித்தார்.

    பா.ஜ.க. எம்.பி.யான ஹேமமாலினியை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மந்திரி ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×