search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி
    X
    மம்தா பானர்ஜி

    அபிஜித் பானர்ஜி, சவுரவ் கங்குலியால் வங்காளத்துக்கு பெருமை - மம்தா பானர்ஜி புகழாரம்

    நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோரால் வங்காளத்துக்கு பெருமை சேர்ந்துள்ளது என அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி புகழாரம் சூட்டியுள்ளார்.
    கொல்கத்தா:

    2019-ம் ஆண்டு பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி பொருளியல் நிபுணர்கள் அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூஃப்லோ, மைக்கேல் கிரீமர் ஆகியோர் இந்த ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    நோபல் பரிசு வென்ற நிபுணர்களில் ஒருவரான அபிஜித் பானர்ஜி, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதேபோல், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

    இந்நிலையில், நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோரால் வங்காளத்துக்கு பெருமை சேர்ந்துள்ளது என அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி புகழாரம் சூட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    வங்காளத்தில் பிறந்த அபிஜித் பானர்ஜி நோபல் பரிசு பெற்றுள்ளார். இதேபோல், பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். 

    அபிஜித் பானர்ஜி மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோரால் வங்காளத்துக்கு பெருமை சேர்ந்துள்ளது. இவர்கள் போன்றோரால் வங்காளம் வளர்ச்சிப் பாதையில் முன்னேறிக் கொண்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×