search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதானி வில்மர் நிறுவனத்தின் ஒரு பிரிவு
    X
    அதானி வில்மர் நிறுவனத்தின் ஒரு பிரிவு

    அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.36000 கோடி வருவாய் ஈட்ட அதானி வில்மர் நிறுவனம் இலக்கு

    அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் நுகர்வோர் வணிகத்தின் மூலம் வருவாயை இரட்டிப்பாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக அதானி வில்மர் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.
    கொல்கத்தா:

    குஜராத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அதானி குழுமம் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த வேளாண் வணிகக் குழுமத்தின் கூட்டு நிறுவனம் அதானி வில்மர். இந்த நிதியாண்டில் அதானி வில்மர் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.28000 கோடியாக உள்ளது. அதில் நுகர்வோர் வணிகத்தின் மூலம் ரூ.18000 கோடி வருவாய் கிடைத்துள்ளது, மீதமுள்ள வருவாய் மற்ற நிறுவன பிரிவுகள் மூலம் கிடைத்துள்ளது. வருவாயை மேலும் அதிகரிக்கும் முயற்சியில் இந்நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    இது தொடர்பாக அதானி வில்மர் குழுமத்தின் மார்க்கெட்டிங் தலைவர் அஜய் மோத்வானி கூறுகையில், “சமையல் எண்ணெய் விற்பனையில் எங்கள் நிறுவன உற்பத்தி பொருளான ‘பார்ச்சூன்’ சமையல் எண்ணெய் முதலிடத்தில் உள்ளது. உணவுத்துறையில் மேலும் ரூ.2000 கோடி அளவில் முதலீடு செய்து வியாபரத்தை தொடங்கியுள்ளது.

    அடுத்த 5 ஆண்டுகளில் நுகர்வோர் வணிகத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை இரட்டிப்பாக்கும் (ரூ.36000 கோடி) உக்தியை கையாளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்,” என்றார்.

    அதானி வில்மர் குழுமத்திற்கு கிடைக்கும் மொத்த வருவாயில் 90 சதவீதம் ‘பார்ச்சூன்’ சமையல் எண்ணெய் விற்பனை மூலம் கிடைப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
    Next Story
    ×