search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    துர்கா பூஜை நிகழ்ச்சியின் போது அவமதிக்கப்பட்டேன்: மேற்கு வங்காள ஆளுநர் குற்றச்சாட்டு

    மேற்கு வங்காளத்தில் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த துர்கா பூஜை நிகழ்ச்சியின் போது தான் அவமதிக்கப்பட்டதாக அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கார் குற்றச்சாட்டியுள்ளார்.
    கொல்கத்தா:

    நாடு முழுவதும் துர்கா பூஜை நிகழ்ச்சிகள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. துர்கா பூஜைக்கு மிகவும் பிரசிதி பெற்ற மேற்கு வங்காளத்திலும் துர்கா பூஜை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதற்கிடையில் அம்மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) மேற்கு வங்காள அரசு சார்பில் துர்கா பூஜை நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    பல விதமான துர்கா சிலைகள் அணிவகுத்து செல்லும் இந்த நிகழ்ச்சியை கண்டுகளிக்க அம்மாநில முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தனது கட்சி நிர்வாகிகளுடன் அந்த துர்கா பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    மாநில அரசு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் மேற்கு வங்காள ஆளுநர் ஜகதீப் தங்கார் தனது அதிகாரிகளுடன் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் போது ஜகதீப் தங்காருக்கு வழங்கப்பட்ட இருக்கை மேடையின் ஓரத்தில் இருந்ததாகவும், இதனால் அவர் துர்கா பூஜை நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க மிகவும் சிரமப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    துர்கா பூஜை நிகழ்ச்சியின் போது ஆளுநரை வரவேற்ற மம்தா பானர்ஜி
     
    இந்நிலையில், மேற்கு வங்காள அரசு ஏற்பாடு செய்திருந்த துர்கா பூஜை நிகழ்ச்சியில் தான் அவமதிக்கப்பட்டுவிட்டதாக அம்மாநில ஆளுநர் குற்றச்சாட்டியுள்ளார்.

    இது குறித்து இன்று அவர் கூறுகையில், 'துர்கா பூஜை நிகழ்ச்சியின் போது நான் சுமார் 4 மணி நேரம் மேடையில் அமர்ந்திருந்தேன். ஆனால் என்னை முழுவதும் இருட்டடிப்பு செய்துள்ளனர். இதன் மூலம் நான் மிகவும் அவமதிக்கப்பட்டுவிட்டேன் என்பதை உணர்ந்தேன். இந்த அதிர்ச்சி நிறைந்த வலியில் இருந்து மீண்டுவர எனக்கு மூன்று நாட்கள் தேவைப்பட்டது.

    இந்த அவமானம் எனக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மேற்கு வங்காள மக்களுக்கும் தான். மக்கள் ஒருபோதும் இதை சகித்துக் கொள்ளமாட்டார்கள். நான் மேற்கு வங்காள மக்களுகான ஊழியர். எனது சட்ட ரீதியிலான கடமையை செய்ய எதுவும் என்னை தடுக்க முடியாது'. என ஆளுநர் தெரிவித்தார்.
    Next Story
    ×