search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜேபி நட்டா, தேவேந்திர பட்னாவிஸ், சந்திரகாந்த் பாட்டீல்
    X
    ஜேபி நட்டா, தேவேந்திர பட்னாவிஸ், சந்திரகாந்த் பாட்டீல்

    அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி வேலை வாய்ப்புகள் - மகாராஷ்டிராவில் பாஜக தேர்தல் அறிக்கை

    மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜக கட்சி, 1 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. .
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் தேர்தல் முடிவுகள் 24-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

    இதை முன்னிட்டு பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. மகராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், பாஜக செயற்குழு தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா, மாநில பிரிவு தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் மற்றும் பிற தலைவர்கள் முன்னிலையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

    பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், அடுத்த ஐந்து ஆண்டிற்குள் மாநிலத்தில் ஒரு கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

    வரும் 2022 ம் ஆண்டிற்குள் வீடு இல்லாத அனைவருக்கும் வீடுகள் கட்டித்தரப்படும்.

    மாநிலத்தின் பொருளாதாரத்தை ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    வறட்சியை தவிர்க்க 11 அணைகளை ஒன்றிணைக்கும் மராத்வாடா நீர் விநியோக அமைப்பு திட்டம் உருவாக்கப்படும்.
     
    இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
     
    Next Story
    ×