search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கோவில்
    X
    திருப்பதி கோவில்

    திருப்பதி உண்டியலில் 5 கிலோ தங்க நகை காணிக்கை

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 5 கிலோ தங்க நகையை பக்தர் ஒருவர் காணிக்கையாக செலுத்தி உள்ளார்.
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற பணம், தங்க நகை காணிக்கை செலுத்தி வருகின்றனர். அவற்றை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைத்து வருகின்றது. பிரம்மோற்சவ விழாவை தொடர்ந்து கோவிலில் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    நேற்று பிரதான உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. அப்போது பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கிய தங்க நகைகள் இருந்தன. அதில் ஏழுமலையானுக்கு அணிவிக்க கூடிய வகையில் 5 கிலோ எடையில் ஒரு ஆரம் இருந்தது. இதனை செலுத்திய பக்தர் யார் என்பது தெரியவில்லை. இதன் மதிப்பு ரூ.2 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

    நேற்று 92 ஆயிரத்து 736 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 30 ஆயிரத்து 738 பேர் மொட்டை போட்டு நேர்த்திகடன் செலுத்தினர். ரூ.2 கோடியே 81 லட்சம் உண்டியல் வசூலானது. சாமி தரிசனத்துக்கு 20 மணி நேரமானது.

    திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர்.

    ஞாயிற்றுக்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.6 லட்சம், கோ சம்ர‌ஷண அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம், உயிர்காக்கும் மருத்து அறக்கட்டளைக்கு ரூ.11 லட்சம், கல்வி தான அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.19 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

    திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் 2 நாட்கள் மூத்த குடிமக்கள் மற்றும் கைக்குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்டோருக்கு இலவச தரிசனம் வழங்கி வருகிறது.

    அதன்படி, இன்று மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு ஆயிரம் பேர், மதியம் 2 மணிக்கு 2 ஆயிரம் பேர், மாலை 3 மணிக்கு ஆயிரம் பேர் என ஒரு நாளைக்கு 4 ஆயிரம்பேருக்கு தரிசனம் வழங்க உள்ளது.

    அதேபோல் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு சுபதம் வழியாக தரிசனம் வழங்கப்பட உள்ளது. தேவஸ்தானம் அளிக்கும் இந்த வாய்ப்பை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதியில் இந்த வாரம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×