search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கேரளாவில் 1ž கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் - 6 பேர் கும்பல் கைது

    கேரளாவில் 1 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பெருந்தல்மண் பகுதியில் உள்ள ஒரு மரக்கடையில் மத்திய அரசால் மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகளை 6 பேர் மாற்ற முயற்சி செய்தவாக பெருந்தல்மன்னா போலீஸ் சூப்பிரண்டு விஸ்வா ரமேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான பெருந்தல்மன்னா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூ.500, 1000 நோட்டுகளை மாற்றி ரூ.12 லட்சம் புதிய நோட்டுகள் வாங்க முயன்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் பணத்தை மாற்ற முயன்ற 6 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் கேரளமாநிலம் வடகரையை சேர்ந்தவர்கள் அஸரப்(வயது45), சுபை(52), மலாஞ்சேரியை சேர்ந்தவர் ரியாஸ்(37), கொளத்தூரை சேர்ந்தவர்கள் முகமது(29), சலீம்(21), செப்புளச்சேரி அஸரப்(39) என்பதும், அவர்கள் ரூ.1ž கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட ரூ.500, 1000 ரூபாய் பணத்தை மாற்ற முயற்சி செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 6 பேரையும் கைது செய்து பெருந்தல்மன்னா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×