search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி ஜின்பிங்
    X
    ஜி ஜின்பிங்

    தமிழர் பாரம்பரிய உடையில் ஜி ஜின்பிங் - வைரல் புகைப்படங்களை நம்பலாமா?

    சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழர் பாரம்பரிய உடையில் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.



    சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழர் பாரம்பரிய உடை அணிந்து நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. புகைப்படத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காணப்படுகிறார். தற்சமயம் வைரலாகி இருக்கும் புகைப்படம் போட்டோஷாப் மூலம் மாற்றப்பட்டிருக்கிறது.

    போட்டோஷாப் செய்யப்பட்டிருக்கும் புகைப்படம் சீன அதிபர் சென்னை வந்திருந்த போது எடுக்கப்பட்டதாகும். இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக ஜி ஜின்பிங் சென்னை வந்திருந்த போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். சந்திப்பின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழர் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை அணிந்திருந்தார்.

    வைரல் முகநூல் பதிவு

    போலி புகைப்படத்திற்கு மலையாள மொழியில் தலைப்பிடப்பட்டுள்ளது. ‘அதில் உண்மையான மோடி மேஜிக்கை பாருங்கள், சீன அதிபர் பாகிஸ்தான் சென்ற போது.. இந்திய உடை அணிந்திருந்தார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

    மோசமாக போட்டோஷாப் செய்யப்பட்டிருக்கும் புகைப்படத்தில் ஜி ஜின்பிங் கார்பெட்டின் மேல் மீதப்பது தெளிவாக தெரிகிறது. புகைப்படத்தை இணையத்தில் ரிவர்ஸ் சர்ச் செய்ததில் ஜி ஜின்பிங் கருப்பு சூட், வெள்ளை நிற சட்டை மற்றும் நீல நிற டை அணிந்திருக்கும் புகைப்படம் காணக்கிடைத்தது. 

    வைரல் புகைப்படத்தை உண்மையில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தாமஸ் பீட்டர் என்பவர் எடுத்திருந்தார். இந்த புகைப்படம் நவம்பர் 2018 இல் இம்ரான் கான் பீஜிங் சென்ற போது எடுக்கப்பட்டதாகும். 

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பலர் பாதிக்கப்படுகின்றனர். சமயங்களில் போலி செய்தி பாதிப்பு மூலம் உயிரிழிப்புகளும் ஏற்பட்டிருக்கிறது.
    Next Story
    ×