search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோர்ட்டார் குண்டுகளை வீசும் கவண்கள்
    X
    மோர்ட்டார் குண்டுகளை வீசும் கவண்கள்

    பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய வீரர் பலி

    காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினர் நடத்திய மோர்ட்டார் குண்டு தாக்குதலில் காயமடைந்த இந்திய வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    ஜம்மு:

    பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த தாக்குதல்களில் இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் உயிரிழப்பதுடன் எல்லையோர கிராமங்களில் வாழும் இந்திய மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

    அவ்வகையில், கடந்த 15 ஆண்டுகால வரலாற்றில் மிக அதிகமான அளவில் கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் படைகள் 2936 முறை எல்லையோரத்தில் உள்ள இந்திய நிலைகளின்மீது அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளது.

    இந்த ஆண்டிலும் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இதுவரை 2050-க்கும் அதிகமான முறை பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் நமது தரப்பில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

    வெடித்து சிதறிய மோர்ட்டார் குண்டுகள்

    இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாரமுல்லா மாவட்டத்துக்குட்பட்ட உரி எல்லைக்கோடு பகுதியில் ஹட்லாங்கா மற்றும் நானக் ஆகிய இடங்களில் உள்ள இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு நிலைகளை நோக்கி பாகிஸ்தான் படையினர் நேற்று மாலை மோர்ட்டார் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த ஒரு வீரர் படுகாயம் அடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    Next Story
    ×