search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    ஜம்மு - காஷ்மீர், லடாக் ஒரு துண்டு நிலம் அல்ல, அது இந்தியாவின் கிரீடம்: பிரதமர் மோடி

    மராட்டிய மாநிலம் ஜலாகான் பொக்கூட்டத்தில் பேசிய மோடி, ஜம்மு - காஷ்மீர், லடாக் ஒரு துண்டு நிலம் அல்ல; அது இந்தியாவின் கிரீடம் என ஆக்ரோசமாக பேசினார்.
    288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கும், 90 உறுப்பினர்களை கொண்ட அரியானா சட்டசபைக்கும் வருகிற 21-ந்தேதி தேர்தல் நடக்கிறது. 24-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    மராட்டிய மாநிலத்தில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மோடி இன்று 2 இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

    முதலாவதாக ஜலாகான் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் பேசுகையில் ‘‘370-வது பிரிவை கொண்டு வருவோம் என எதிர்க்கட்சியினர் தங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்க துணிவிருக்கிறதா?.

    பிரதமர் மோடி


    370 பிரிவு குறித்து தினந்தோறும் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். அதை மீண்டும் கொண்டு வருவதற்கான  வலிமை அவர்களிடம் உள்ளதா? காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கொண்டு வர நாட்டு மக்கள் அனுமதிப்பார்களா?.

    எங்களை பொறுத்தவரை ஜம்மு - காஷ்மீர், லடாக் ஒரு துண்டு நிலம் அல்ல; அது இந்தியாவின் கிரீடம்’’ என்று ஆக்ரோசமாக பேசினார்.
    Next Story
    ×