search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்துறை மந்திரி அமித் ஷா
    X
    உள்துறை மந்திரி அமித் ஷா

    தகவலறியும் உரிமைச் சட்டத்தின் தேவை எதிர்காலத்தில் அதிகமாக இருக்காது : அமித் ஷா

    தகவலறியும் உரிமைச் சட்டத்தின் பயன்பாட்டை எதிர்காலத்தில் குறைப்பதற்கு தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் ஆட்சியின் போது 2005-ம் ஆண்டு தகவலறியும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, பொதுமக்கள் நீதிமன்றத்தில் மூலம் அரசு அலுவலகங்களின் செயல்பாடுகள் மற்றும் அதன் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளலாம். 

    இந்த சட்டத்தின் மூலம் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை ஏற்பட்டு ஊழல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் குறையும் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. 

    இந்நிலையில், அரசு துறைகள் தொடர்பான தகவல்களை பொது தளத்தில் வெளியிடுவதன் மூலம் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் பயன்பாடு எதிர்காலத்தில் குறைந்துவிடும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டெல்லியில் இன்று நடைபெற்ற  மத்திய தகவல் ஆணையத்தின் 14-வது கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கூறியதாவது:-

    தகவலறியும் உரிமைச் சட்டம் கடந்த 14 ஆண்டுகளாக அரசு நிர்வாகத்தையும் பொதுமக்களையும் இணைக்கும் பாலமாக சிறப்பாக செயல்பட்டு சுமார் 2.5 கோடிக்கும் அதிகமான தகவல்கள் பகிரந்துள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு அரசின் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது. இது ஜனநாகயகத்தில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

    கோப்பு படம்

    மத்திய அரசு நிர்வாகம் சார்ந்த அதிகபட்ச தகவல்களை பொது தளங்களில் வெளியிடுவதற்கான உள்கட்டமைப்பு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இதன் மூலம் தகவலறியும் உரிமை சட்டத்தின் தேவை குறைந்து அரசு நிர்வாகத்தில் வெளிப்படையான தன்மை அதிகரிக்கும். 

    தகவலறியும் சட்டத்தின் மூலம் அரசு துறை சார்ந்த தகவல்களை பொதுமக்களுக்கு வழங்க 5 லட்சம் பேரை பணியமர்த்தியுள்ள ஒரே நாடு உலகிலேயே இந்தியாவாகத்தான் இருக்க முடியும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×