search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி பிரம்மோற்சவம்
    X
    திருப்பதி பிரம்மோற்சவம்

    திருப்பதியில் பிரம்மோற்சவ உண்டியல் காணிக்கை ரூ.20.40 கோடி

    திருப்பதியில் பிரம்மோற்சவ நாட்களில் 7.07 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். உண்டியல் காணிக்கையாக ரூ.20.40 கோடி கிடைத்துள்ளது.
    திருமலை:

    திருப்பதியில் கடந்த 30-ம் தேதி முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கி நடந்து வந்தது. நேற்று நிறைவு நாள் நிகழ்ச்சியாக சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி மற்றும் மாலையில் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடந்தது.

    பிரம்மோற்சவ நாள்களில் சிறப்பாக பணியாற்றிய அனைவரையும் தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் பாராட்டினார். பிரம்மோற்சவத்தின் 8 நாட்களும் தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை, வசூலான உண்டியல் காணிக்கை, அன்னதானம் சாப்பிட்டவர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவை உள்ளடக்கிய பட்டியலை அவர் வெளியிட்டார்.

    அதன் விவரம் வருமாறு:-

    பிரம்மோற்சவ நாட்களில் 7.07 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். உண்டியல் காணிக்கையாக ரூ.20.40 கோடி வசூலாகியுள்ளது. 34.01 லட்சம் லட்டு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் ரூ.8.82 கோடி வருவாய் கிடைத்துள்ளது. வாடகை அறை மூலம் ரூ.1.29 கோடி வருமானம் கிடைத்துள்ளது. 26 லட்சம் பேர் அன்னதானம் சாப்பிட்டுள்ளனர். 3.23 லட்சம் பேர் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 40 டன் மலர்கள் சாமி அலங்காரத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆந்திர மாநில பஸ்களில் 4.29 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

    Next Story
    ×