search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா
    X
    சசிகலா

    சசிகலா சிறை விதிகளை மீறியது உண்மைதான்- விசாரணை அறிக்கையில் தகவல்

    பெங்களூரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சிறை விதிகளை மீறியது உண்மைதான் என விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    பெங்களூரு:

    சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி விசே‌ஷ சலுகைகள் அளிக்கப்படுவதாகவும், சிறை விதிகளை மீறி அவர் வெளியே சென்றதாகவும் பரபரப்பு புகார் எழுந்தது.

    இது தொடர்பாக அப்போதைய கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா திடீர் சோதனை நடத்தி விதி மீறல்களை கண்டுபிடித்தார். சசிகலாவுக்கு சலுகைகள் வழங்க கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. சத்யநாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் டி.ஐ.ஜி. ரூபா குற்றம் சாட்டினார்.

    இந்த புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்டக் குழுவை கர்நாடக அரசு நியமித்தது. அந்த குழு தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், சிறை விதிகளை சசிகலா மீறியது உண்மைதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    “சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதும் 5 செல்களில் இருந்த கைதிகளை வெளியேற்றி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. சிறையில் சசிகலாவுக்காக சமையல் செய்ப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறையில் இருந்து விதிகளைமீறி சசிகலா வெளியே சென்றது குறித்து காவல் அதிகாரி ரூபா கூறிய புகார் உண்மைதான்” எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    எனவே, சசிகலா நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை ஆவதில் சிக்கல் உருவாகி உள்ளது.
    Next Story
    ×