search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எஸ் பேங்க் பற்றிய வாட்ஸ்அப் தகவல் ஸ்கிரீன்ஷாட்
    X
    எஸ் பேங்க் பற்றிய வாட்ஸ்அப் தகவல் ஸ்கிரீன்ஷாட்

    இந்த வங்கி மூடப்படுகிறதா? வைரல் குறுந்தகவல்கள் உண்மையா?

    வாட்ஸ்அப் செயலியில் வேகமாக பரவும் குறுந்தகவல் ஒன்றில் இந்த வங்கி மூடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



    எஸ் பேங்க் மூடப்படுவதாக வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல் ஒன்று வேகமாக பரவுகிறது. இது எஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் மத்தியில் வீண் குழப்பத்தை விளைவிக்கிறது. முன்னதாக மும்பையை சேர்ந்த பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கோ ஆப்பரேட்டிவ் பேங்க் செயல்பட மத்திய ரிசர்வ் வங்கி தடை விதித்தது. 

    இதைத் தொடர்ந்து இரு வங்கிகளுக்கு பின் எஸ் பேங்க் மூடப்படலாம் என்ற வாக்கில் வாட்ஸ்அப்பில் குறுந்தகவல் பரவுகிறது. இந்நிலையில், வைரல் குறுந்தகவல்களை நம்ப வேண்டாம் என எஸ் பேங்க் அறிவித்துள்ளது. எஸ் பேங்க் மூடப்படுவதாக வைரலாகும்  குறுந்தகவல்களில் துளியும் உண்மையில்லை என எஸ் பேங்க் தெரிவித்துள்ளது.

    முன்னதாக எஸ் பேங்க் பங்குகள் பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவாக வீழ்ச்சியடைந்தது. செப்டம்பர் 30 ஆம் தேதி எஸ் பேங்க் பங்குகளின் விலை ரூ. 41.40 ஆக இருந்தது. பின் இது ட்விட்டரிலும் டிரெண்டிங் ஆனது. இந்த ஆண்டு துவக்கம் முதலே எஸ் பேங்க் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.

    எஸ் பேங்க் சி.இ.ஒ. வெளியிட்ட அறிக்கை ஸ்கிரீன்ஷாட்

    மோசமான நிதிநிலைமை, ரியல் எஸ்டேட் துறை வீழ்ச்சி போன்று பல்வேறு காரணங்களால் எஸ் பேங்க் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இதுவே வாட்ஸ்அப் குறுந்தகவல் மீது வாடிக்கையாளர்கள் நம்பிக்கை வைக்க காரணமாக அமைந்திருக்கலாம்.

    அந்த வகையில் எஸ் பேங்க் மூடப்படுவதாக வாட்ஸ்அப் செயலியில் வலம் வரும் குறுந்தகவல் போலி என்பது உறுதியாகியுள்ளது. 

    போலி செய்திகளை பரப்பாதீர்கள், போலி செய்திகளால் பலர் பாதிக்கப்படுகின்றனர். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×