search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் புகைப்படம்
    X
    வைரல் புகைப்படம்

    பொது மக்களை வெளுத்து வாங்கும் காவல் துறை - வைரல் வீடியோவின் பரபர பின்னணி

    வயதானவர் மீது போலீசார் நடத்திய கொடூர தாக்குதலின் வீடியோ ஃபேஸ்புக்கில் வைரலாகியுள்ளது. இதன் பரபர பின்னணியை பார்ப்போம்.



    ஃபேஸ்புக்கில் வைரலாகும் வீடியோ காஷ்மீரில் எடுக்கப்பட்டதாக பகிரப்படுகிறது. வைரல் வீடியோவில் வயதானவர் மீது போலீசார் கொடூரமாக தாக்கும் பகீர் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

    வைரல் பதிவுகளில், காஷ்மீரில் இருந்து வரும் தகவல் அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது. இங்கு 13,000 குழந்தைகள் இதே நிலையில் தான் இருக்கின்றனர் என கூறப்பட்டுள்ளது. இந்த தகவலுடன் போலீஸ் அடாவடிகள் என்ற தலைப்பில் புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

    காவல் துறை அடாவடி உண்மை தானா என ஆய்வு செய்ததில், வைரல் பதிவுகளில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படம் ஐந்து ஆண்டுகள் பழையது என தெரியவந்துள்ளது. மேலும் இந்த புகைப்படம் பாகிஸ்தானின் லாகூரில் எடுக்கப்பட்டதும் உறுதியாகியுள்ளது. அதன்படி வைரல் பதிவுகளில் கூறப்பட்டுள்ளதை போன்று இந்த சம்பவம் காஷ்மீரில் நடைபெறவில்லை என்பது தெளிவாகியுள்ளது.

    வைரல் ஃபேஸ்புக் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    வைரல் புகைப்படத்தை இணையத்தில் தேடிய போது, அது இதே புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பல ஆண்டுகளாக உலவி வருவது தெரியவந்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த பல்வேறு வலைத்தளங்களில் இதே புகைப்படம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

    உண்மையில் இந்த சம்பவம் ஜூன் 2014 இல் நடைபெற்றிருக்கிறது. இது லாகூரின் மாடல் டவுனில் அரங்கேறியிருக்கிறது. வைரல் புகைப்படம் பாகிஸ்தான் அவாமி தெரீக் ஆதரவாளர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளிடையே ஏற்பட்ட மோதலின் போது எடுக்கப்பட்டதாகும். 

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பலர் பாதிக்கப்படுகின்றனர். சமயங்களில் போலி செய்தி பாதிப்பால் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. 
    Next Story
    ×